தீப உற்சவ விழாவை முன்னிட்டு அயோத்தி மாநகரம் முழுவதும் மின் விளக்குகளால் ஜொலித்து வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையொட்டி, தீப உற்சவ் எனப்படும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2017-ம் ஆண்டு தீப உற்சவ விழாவை, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மிக பிரமாண்ட வகையில் துவக்கி வைத்தார். புனித நகரமான அயோத்தியில் உள்ள பகவான் ராமர் திருக்கோவிலில் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றிவைத்து விழா கொண்டாடப்படும்.
அந்த வகையில், 2017 -ம் ஆண்டு 1.71 லட்சம் தீபங்களும், 2018 -ம் ஆண்டு 3.01 லட்சம் தீபங்களும், 2019 -ம் ஆண்டு 4.04 லட்சம் தீபங்களும், 2020 -ம் ஆண்டு 6.06 லட்சம் தீபங்களும், 2021 -ம் ஆண்டு 9.41 லட்சம் தீபங்களும், 2022 -ம் ஆண்டு 15.76 லட்சம் தீபங்களும் 2023 -ம் ஆண்டில் 21 லட்சம் தீபங்களும் ஏற்பட்டன.
இந்த வருடம் அயோத்தி நகரம் முழுவதும் 5.5 லட்சம் மகா தீபங்கள் ஏற்றப்பட உள்ளது. சரயு நதிக்கரையிலும் தீபங்கள் ஏற்றும் வைபம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் பங்கே ஆர்வமுடன் காத்துள்ளனர்.
மேலும், ராமாயணத்தில், ராமர், அனுமன் உள்ளிட்ட கதாபாத்திரங்களைச் சித்தரிக்கும் பதாகைகள் வைக்கப்பட்டு அவைகள் மின் விளக்குகளால் ஜொலித்து வருகிறது. தீப உற்சவ விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.