உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப் பெற 255 ரன்கள் எடுக்கவேண்டும்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று இன்றையப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப் பெற 255 ரன்கள் இலக்காக உள்ளது. தற்போது ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.