இந்துக்களின் ஆதரவை காங்கிரஸ் விரும்பவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவரும் ஆன்மீக குருவுமான ஆச்சார்யா பிரமோத், காங்கிரஸ் தலைமை மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். ராமரை வெறுக்கும் சில தலைவர்கள் காங்கிரஸில் இருப்பதாக நான் உணர்கிறேன்.
இந்த தலைவர்கர் ‘இந்து’ என்ற வார்த்தையை வெறுக்கிறார்கள், அவர்கள் இந்து மத குருக்களை அவமதிக்க விரும்புகிறார்கள், கட்சியில் இந்து மத குரு இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இந்துக்களின் ஆதரவை விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இண்டி கூட்டணியில் உள்ளவர்கள் மத்திய அரசை வெறுப்பதை நோக்கமாக கொண்டுள்ளனர்.ரயிலுக்கு ‘வந்தே பாரத்’ என்று பெயர் வைத்தால் அதை எதிர்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பெண்கள் குறித்து கூறிய கருத்துகளை இண்டி கூட்டணியில் உள்ள யாரும் விமர்சிக்கவில்லை என்றும், எல்லாவற்றுக்கும் பாஜகவை குறை கூறுவது தவறு என்றும் அவர் கூறினார்.
இன்டி கூடடணி தற்போது இல்லை என நினைக்கிறேன். சமாஜவாதியை ஏமாற்றிவிட்டதாக அகிலேஷ் யாதவ் கூறுகிறார். ஆம் ஆத்மி காங்கிரஸை நோக்கி விரல் நீட்டுகிறது என அவர் கூறினார்.
ராமர் கோயில் கட்டப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஆச்சார்யா பிரமோத், இது நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்றும், கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனைக்குப் பிறகு, ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.