அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை செயலர்கள் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அரசு முறை பயணமாக அமெரிக்க பாதுகாப்பு துறை செயலளர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் துறைச் செயலர் ஆண்டனி ஜே. பிளிங்கன் டெல்லி வந்துள்ளனர். அமெரிக்க செயலர்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்து பேசினர்.
அப்போது, இருதரப்பு உறவு, பாதுகாப்பு, ரஷ்யா உக்ரைன் போர். இஸ்ரேல் ஹமாஸ் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பிரதமர் மோடியை பிளிங்கன் மற்றும் ஆஸ்டின் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கு ‘இரு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை முக்கிய உதவியாக உள்ளதாக கூறினார்.
இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை உலகளாவிய நன்மைக்கான “சக்தி” என்று அழைத்த பிரதமர் நரேந்திர மோடி, புது தில்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீதான அவர்களின் பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று கூறினார்.