தொழிலாளர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் எனும் கருத்திற்கு காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான – மணீஷ் திவாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பேட்டி ஒன்றில் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மணீஷ் திவாரி, இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மணீஷ் திவாரி தமது எக்ஸ் பக்கத்தில், பொருளாதாரத்தில் நாடு வலுவடைய வேண்டும் எனில் வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் கலாச்சாரத்தை ஏற்க வேண்டும். 70 மணி நேர வேலை, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா என்பதை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும்,
நாராயணமூர்த்தியின் கருத்துக்கு ஏன் இத்தனை எதிர்குரல்கள் என எனக்கு புரியவில்லை, என்னைப் போன்ற அரசியல்வாதிகள் வாரத்தின் 7 நாட்களும் மக்களுக்காக உழைத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.