கர்நாடக பா.ஜ.க தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனையடுத்து, கர்நாடக பா.ஜ.க, முக்கிய அணித் நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இதனால், கடந்த ஆறு மாதங்களாக, கர்நாடக பா.ஜ.க தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இதே போன்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கும் யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகனும், எம்.எல்.ஏ-வுமான விஜயேந்திராவை, மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பிறப்பித்துள்ளார். இதே போல, கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புக்கு முக்கிய நிர்வாகி ஒருவரை நியமிக்க பாஜக தலைமை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்ட விஜயேந்திராவுக்கு, பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.