தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, 21 மாவட்டங்களில், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக நீர்வளத்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுதும் நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஆய்வு மாதந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, சென்னையைத் தவிர்த்து, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், ஆய்வு கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் நடத்தப்பட்ட ஆய்வில், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2.44 மீட்டர், விழுப்புரத்தில் 1.35 மீட்டர், திருவண்ணாமலையில் 1.81 மீட்டர் அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்மேற்கு பருவமழையைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக அமைந்துள்ளது.