வங்க தேசத்தில் இந்து குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை விற்குமாறு மிரட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஷைல்குபாவில் உள்ள இந்துக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட ‘நில ஜிகாத்’ அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் கோவில்கள் சேதப்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வங்க தேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. குல்னா பிரிவில் உள்ள ஷைல்குபா உபாசிலாவில் பல இந்துக் குடும்பங்கள் தங்கள் வீடுகளை காலி செய்து, மதரீதியான துன்புறுத்தலைத் தவிர்ப்பதற்காக குறைந்த விலைக்கு சொத்துக்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சிறுபான்மை சமூகம் இஸ்லாமியர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, எனவே பல இந்து குடும்பங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. . உதாரணமாக, இறந்த சத்யேந்திரநாத் சாஹா என்ற இந்து மதத்தை சேர்ந்தவரின் வீடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்த இடத்த்ல் 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது
‘ஜூபோ லீக்’ தலைவர் ஷமிம் ஹொசைன் மொல்லா மற்றும் அவரது தந்தை சப்தார் ஹொசைன் மொல்லா ஆகியோர் இந்து குடும்பத்தின் சொத்துக்களை அபகரித்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அவாமி லீக் கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்தவர் தாக் ‘ஜூபோ லீக்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து சத்யேந்திரநாத் சாஹாவின் மருமகள் கூறுகையில், ‘ஜூபோ லீக்’ தலைவர் தங்கள் வீட்டை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியதாக தெரிவித்தார். எம்பி முகமது அப்துல் ஹையிடம் புகார் அளித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.