திமுக மூத்த அமைச்சர் ஒருவரின் குடும்பத்தினர் மீது, சென்னை தி.நகரில் உள்ள திரையங்கில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகர் உள்ளது ஒரு பிரபல திரையரங்கம். இந்த திரையரங்கில் திமுக அமைச்சர் ஒருவரின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் உள்ளிட்ட குடும்பத்தினர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த 3 பெண்கள் உட்பட 6 மர்ம நபர்கள் அதிக சத்தம் போட்டுக் கொண்டே இருந்தாதக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சரின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
ஒரு கட்டத்தில், அமைச்சரின் மகன் மற்றும் பேரன் ஆகியோரை அந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், அமைச்சரின் பேரன் மற்றும் உறவினர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தாக்கப்பட்டது திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் என்பது தெரிய வந்தது.
இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது தெரியவில்லை. இதனால், திரையங்கில் உள்ள சிசிவிடி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.