சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தை வரும் 2024 ஜனவரி மாதம் 21 ஆம் தேதி அன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டத்தை வரும் 2024 ஜனவரி மாதம் 21 ஆம் தேதி அன்று நடத்தலாம் என்று, சமுதாயப் பெரியோர்கள் பங்கேற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பேச்சுவார்த்தையில், இரு பெரும் சமூகங்கள் ஒன்றிணைந்து, அனைவரும்…
— K.Annamalai (@annamalai_k) November 10, 2023
பேச்சுவார்த்தையில், இரு பெரும் சமூகங்கள் ஒன்றிணைந்து, அனைவரும் மகிழ்ச்சி அடையும் வண்ணம் ஒரு சிறப்பான முடிவை எட்டியிருப்பது, சமூக நல்லிணக்கத்துக்கு அற்புதமான தொடக்கமாகும்.
இந்த ஒற்றுமை என்றும் தொடர கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரரும், பெரியநாயகி அம்மனும் அருள்புரியட்டும். கண்டதேவி கோவில் தொடர்பான வழக்கை, மிகவும் சிறப்பாகக் கையாண்டு, சமாதானத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்திய மாண்புமிகு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழி நடத்துதல் மிகப்பெரியது எனத் தெரிவித்துள்ளார்.