காசா பகுதியில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் படையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்த தாக்குதலில் இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கு மத்தியில் காசா பகுதியில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், காசாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் யாரும் பாதுகாப்பாக இல்லை. அனைவருக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
காசாவில் உள்ள 36 மருத்துவமனைகளில் பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள் செயல்படவில்லை.
தாக்குதலில் காயமடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், இறக்கும் தருவாயில் உள்ளவர்கள் என மருத்துவமனையே நிரம்பி வழிகிறது. பிணவறைகள் நிரம்பி வழிகின்றன.
மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யும் கொடூரமும் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பாதுகாப்புக்காக மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது ஒரு வேதனையான நிகழ்வு என தெரிவித்துள்ளார்.