திரையரங்கில் டைகர் 3 திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென இருக்கைக்கு மத்தியில் இருந்து பட்டாசுகளை வெடித்து சல்மான் கான் இரசிகர்கள் மக்களுக்கு இடையூறு அளித்துள்ளனர்.
இயக்குனர் மணீஷ் சர்மா இயக்கத்தில், நடிகர் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள Tiger 3 திரைப்படம் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மோகன் திரையரங்கில் தீபாவளி அன்று இரவு Tiger 3 திரைப்படம் திரையிடப்பட்டது.
அப்போது அங்கு கூடிய சல்மான் கானின் இரசிகர்கள் குழு, திரையரங்கிற்குள் அவ்வளவு மக்கள் குடியிருந்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்துள்ளனர். இது, உள்ளே படம் பார்த்துக்கொண்டிருந்த மக்களின் பாதுகாப்புக்கு பெரும் இடையூறாக மாறியுள்ளது.
இந்த பட்டாசு வெடிப்பு சம்பவம் குறித்து வெளியான ஒரு வீடியோவில் திரையரங்கில் டைகர் 3 திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென இருக்கைக்கு மத்தியில் இருந்து ஒரு பட்டாசு வெடிக்க துவங்குகிறது.
இதைக் கண்டு மக்கள் இருபுறமும் அலறி அடித்து ஓடிய நிலையில், எதிரே இருந்த இரு புறங்களும் மேலும் இரண்டு பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது.
ஒரு கட்டத்தில் மக்கள் என்று தெரியாமல் வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள திரையரங்கின் மூளைகளுக்கு ஓடுவதை தெளிவாக அந்த காணொளியில் நம்மால் பார்க்க முடிகிறது. இதுகுறித்து திரையரங்கினர் அளித்த புகாரின்படி, தற்பொழுது விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.