துபாயில் விமான கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் 4.7 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
துபாய் விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சி, அல் மக்தோம்((Al Maktoum)) சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது 13-ம் தேதி தொடங்கிய கண்காட்சி 17-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படையின் தேஜஸ் இலகுரக போர் விமானங்கள் மற்றும் சாரங் ஹெலிகாப்டர்கள், அல் மக்தோம்((Al Maktoum)) விமான நிலையம் சென்றுள்ளது.
இந்நிலையில்,முதல் நாளில் 4.7 பில்லியன் மதிப்பிலான 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
2.14 பில்லியன் மதிப்புள்ள வெடிமருந்துகளை வாங்குவதற்கு ஹால்கான் உடனான ஒப்பந்தம் உட்பட மொத்தம் 2.7 பில்லியன் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பாக Tawazun கவுன்சில் உள்ளூர் நிறுவனங்களுடன் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
மேலும், “ஏர் டைனமிக்ஸ் சொல்யூஷன்ஸ்” நிறுவனத்துடன் 20 மில்லியன் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் உதிரி பாகங்கள் வாங்குதல் மற்றும் விமானங்களை பழுதுபார்த்தல் ஆகியவற்றை வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.