கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் இந்தியாவைப் பற்றிய கருத்து மாறிவிட்டது, இப்போது பலவீனமான நாடாகக் கருதப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் இந்த வாரம் மாநில சட்டமன்றத் தேர்தலை நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்,
“முன்பு, இந்தியாவைப் பற்றிய கருத்து பலவீனமான நாடு, ஏழைகளின் நாடு என்று இருந்தது, ஆனால் கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் அது மாறிவிட்டது. இன்று இந்தியா பலவீனமான நாடாகக் கருதப்படவில்லை. முன்பு இந்தியா எதையாவது பேசும் போது சர்வதேச மேடைகளில், மக்கள் அதை பெரிதாகக் கேட்கவில்லை, ஆனால் இன்று இந்தியா சர்வதேச மேடைகளில் பேசும்போது, மற்ற நாடுகள் கவனமாகக் கேட்கின்றன” என்று கூறினார்.
உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்தது. இது மட்டுமின்றி, முன்னதாக உலக அளவில் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, இன்று முன்னேறி ஐந்தாவது இடத்தில் உள்ளது என கூறினார்.
50 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் என்ன செய்தது? “பிரதமர் ஆன பிறகு, நரேந்திர மோடி, உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்தினார். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இந்தியாவை மிகவும் சக்திவாய்ந்தவராக மாற்றினார், இன்று அது 11 வது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்திற்குத் முன்னேறிஉள்ளது” என்று கூறினார்.