பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு சார்பில், உஜ்வாலா யோஜனா திட்டம் மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாகச் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கி வருகிறது. இதில், கேஸ் அடுப்பு, முதலாவது சிலிண்டர் ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இலவச கேஸ் இணைப்பு எப்படி பெறலாம் என்பதைப் பார்க்கலாம். முதலில், அருகிலுள்ள LPG விற்பனை நிலையத்திற்குச் சென்று இலவச கேஸ் சிலிண்டருக்கான விண்ணப்பத்தைக் கேட்டு வாங்கி அதைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சேமிப்பு கணக்கு பாஸ்புக், வங்கிக் கணக்கு அறிக்கை, இருப்பிடச் சான்று, பிபிஎல் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.
இந்த ஆவணங்களை, சம்பந்தப்பட்ட (இன்டேன் அல்லது பாரத் கேஸ் அல்லது இந்துஸ்தான் பெட்ரோலியம்) கேஸ் விற்பனை நிலையத்தில் கொடுக்க வேண்டும். அவர்கள், விண்ணப்பத்தை சரிபார்த்த பின்பு, அதன் மேல் நடவடிக்கை அனுப்பிவைப்பார்கள். விரைவில், இலவச கேஸ் பெறுவது குறித்து தகவல் வரும்.
18 வயது நிரம்பிய அனைவரும் இலவச கேஸ் கேட்டு விண்ணப்பிக்க முடியும். இது மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் சமூக நலத் திட்டமாகும். இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், பிரதமர் மோடியை பெண்கள் போட்டி போட்டு பாராட்டுகிறார்கள்.