“கலப்பட உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கு குறைந்தது 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று பாஜக எம்பி பிரிஜ்லால் தலைமையிலான உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைக்கின்றது.
நாளுக்கு நாள் கலப்பட உணவின் ஆதிக்கம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.கலப்படம் செய்த உணவை உண்ணுபவர்களுக்கு உடல்நல உபாதைகள் ஏற்படுகிறது. ஏன் சில இறப்புகள் கூட நிகழ்கிறது.
இதனை தடுப்பதற்காக மத்திய அரசு பல நடவடிக்கைகளை செய்துள்ளது. அந்த வகையில் தற்போது கலப்பட உணவு அல்லது கலப்பட பானங்களை விற்பனை செய்பவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாத கால சிறைத்தண்டனையும், குறைந்தபட்சம் ரூ.25,000 அபராதமும் விதிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
கலப்பட உணவை விற்பவர்களுக்கு குறைந்தபட்சமாக 6 மாத கால சிறைத் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படி கலப்பட உணவை விற்பனை செய்பவர்களுக்கு தண்டனை அதிகமாக்க வேண்டும் என்று பாஜக எம்பி பிரிஜ்லால் தலைமையிலான உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கையில், ” கலப்பட உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இந்தச் சட்டப்பிரிவின் கீழ் நடைபெறும் குற்றத்திற்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறை தண்டனை மற்றும் குறைந்தபட்ச ரூ 25,000 அபராதம் விதிக்கபட வேண்டும் ” என்று பாஜக எம்பி பிரிஜ்லால் தலைமையிலான உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைக்கிறது.