தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு, பயணிகள் பலரும் மகிழ்ச்சியாக சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனால், திமுகவின் உருட்டை நம்பி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து, 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்து பயணம் செய்த ஒரே காரணத்திற்காக, பெண் பயணி ஒருவர் கண்ணீர் விடும் நிலைக்கு சென்றுவிட்டார்.
விசாரித்தபோதுதான் தெரிந்தது, வழியில் கன மழை வெளுத்து வாங்கியது. பஸ்ஸில் அருவி போல தண்ணீர் கொட்டியுள்ளது. சீட்டில் அமர முடியாமல் கண்ணீர் விட்ட அந்த பெண் நடத்துனரிடம், எப்படி இந்த சீட்டில் அமர்ந்து செல்வது என கேள்வி எழுப்பினார்.
ஆனால் அந்த நடத்துநர் என்ன செய்வார் பாவம்? இந்த கேள்வியை போக்குவரத்து துறையிடம் கேட்டிருக்க வேண்டும். வேறு வழி இல்லாமல் அந்த நடத்துநர் தனது இருக்கையை அந்த பெண்ணுக்கு அளித்தார். அந்த நடத்துநர் ஓட்டுநராக செயல்படுவார் போல. ஓய்வு எடுக்க முடியாமல் அந்த பெண்ணுக்கு தனது இருக்கையை வழங்கினார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் பயணிகள் ஹெல்ப் லைனுக்கு போன் செய்து லேசாக கண் அசரலாம் என்ற நிலையில் அவர்களை சென்னை அன்போடு வரவேற்றது.
இப்படி, நடத்துநரும், ஓட்டுநரும் தங்களது சீட்டை பயணிக்கு விட்டுக் கொடுத்து ஓட்டினால், பேருந்து உள்ளே பயணிகள் எப்படி பாதுகாப்பாக செல்ல முடியும் என கேள்வி எழுப்புகின்றனர் சமூக அக்கறை உள்ள பயணிகள்.
தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளை காரணமாக அரசு பேருந்தை நாடும் பயணிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தந்த தீபாவளி பரிசை அந்த பேருத்தில் பயணம் செய்த பயணிகள் என்று மறக்க மாட்டார்கள்.