கூகுளில் தீபாவளி பற்றி அதிகம் தேடப்பட்ட 5 கேள்விகள் – சுந்தர் பிச்சை சொன்ன தகவல்.
தீபாவளி பண்டிகை பற்றி கூகுளில் தேடப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை சுந்தர் பிச்சை வழங்கி உள்ளார்.
நாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாங்கள் முடிந்துவிட்ட நிலையில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தீபாவளி பண்டிகை பற்றி கூகுளில் தேடப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை வழங்கி உள்ளார்.
இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகள் கொண்ட விளக்கப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
Happy Diwali to all who celebrate! We’re seeing lots of interest about Diwali traditions on Search, here are a few of the top trending “why” questions worldwide: https://t.co/6ALN4CvVwb pic.twitter.com/54VNnF8GqO
— Sundar Pichai (@sundarpichai) November 12, 2023
அதில் ‘இந்தியர்கள் ஏன் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்?’ என்ற கேள்வி கூகுள் தேடலில் முதலிடத்தில் இருந்தது. அதைத் தொடர்ந்து ‘தீபாவளி அன்று நாம் ஏன் ரங்கோலி கோலம் போடுகிறோம்.
‘தீபாவளி அன்று நாம் ஏன் விளக்குகளை ஏற்றுகிறோம், ‘தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜை ஏன் செய்யப்படுகிறது,’ இறுதியாக, ‘தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ‘ என்ற 5 கேள்விகள் தான் தீபாவளி தொடர்பாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகள் ஆகும்.
சுந்தர் பிச்சையின் இந்த பதிவிற்குப் பதிலளிக்கும் விதமாக, பலரும் அவருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். முன்னதாக, ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்கும் தீபாவளியை முன்னிட்டு இந்தியர்களுக்கு X-ல் வாழ்த்து தெரிவித்தார்.