பாகிஸ்தானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது.
பாகிஸ்தானில் இன்று காலை 5.35 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகி உள்ளது.
இந்த நிடுநடுகத்தால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, இலங்கையில் நேற்று மதியம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.