ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவு பூங்கா மற்றும் சுதந்திர போராட்ட அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்றும் இன்றும் ஜார்கண்ட் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று ராஞ்சியில் உள்ள பகவான் பிர்சா முண்டா நினைவுப் பூங்கா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
அதன் பின்னர் பகவான் பிர்சா முண்டாவின் பிறப்பிடமான உலிஹாட்டு கிராமத்திற்குச் செல்லும் அவர், அங்கு பகவான் பிர்சா முண்டாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தினர்.
ஜார்க்கண்டில் சுமார் ரூ.7200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சுமார் ரூ.24,000 கோடி பட்ஜெட்டில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களுக்கான இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.