விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய ரஜினிகாந்த், கிரிக்கெட் போட்டியை காண செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
ஒரு நாள் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் இப்போட்டியை காண சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுக்கும் சம வாய்ப்பு இருப்பதால் இரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்தப் போட்டி அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இந்நிலையில் இப்போட்டியை நேரில் பார்ப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
முன்னதாக விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய ரஜினிகாந்த், கிரிக்கெட் போட்டியை காண செல்ல இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் ரஜினியின் இரசிகை ஒருவர் நடிகர் ரஜினியை பார்த்து ஐலவ்யூ என கூற ரஜினி நன்றி என தெரிவித்து சென்றார்.