சென்னையில் சாகித்ய அகாதெமியில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
தேசிய புத்தக வாரத்தை யொட்டி, சென்னை சாகித்ய அகாதெமியில் நவம்பர் 14 -ம் தேதி முதல் நவம்பர் 20 -ம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் தொடங்கி வைத்தார்.
புத்தக கண்காட்சி தினமும் காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் இடம் பெற்றுள்ளன.
சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வாசிப்பை அதிகப்படுத்தும் வகையில் 20 முதல் 50 சதவீதம் தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது.
அடாத மழையிலும், வாசிப்பு தாகம் அடங்காத வாசகர்கள் விடாமல் புத்தக கண்காட்சிக்கு படையெடுத்து வருகின்றனர்.