ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறயுள்ளது. மேலும் 2019 அரையிறுதி தோல்விக்கு இந்தியா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா 4 ஆம் இடத்தில இருந்த நியூசிலாந்து அணியுடன் விளையாடி எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது.
அதேபோல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா அரையிறுதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்றையப் போட்டி மீண்டும் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. மும்பை வான்கிடே மைதானத்தில் இந்திய அணி இதுவரை 21 போட்டிகளில் விளையாடி 12 யில் வெற்றி பெற்றும் 9 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்த மைதானத்தில் இந்திய அணி எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 357/8.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 117 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்தியா 59 முறையும், நியூசிலாந்து 50 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டை-யில் முடிந்தது. 7 மேட்ச்சுகளில் எந்த முடிவும் எட்டப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டன.
இவற்றில் இந்தியா 24 முறை முதலில் பேட்டிங் செய்தும், 35 முறை சேஸிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்து 28 முறை சேஸிங் செய்தும், 22 முறை முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளன.
உலகக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில், 5ல் நியூசிலாந்தும், 4ல் இந்தியாவும் வெற்றியை வசப்படுத்தியுள்ளன.
ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. எனவே இந்த போட்டியில் வென்று வெற்றிக்கணக்கை சமன் செய்வதோடு, 2019 அரையிறுதி தோல்விக்கு இந்தியா பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்திய 72% வெற்றி பெரும் என்றும், நியூசிலாந்து 28% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிபட்டுள்ளது.