“நான் மும்பை வான்கடேவில் நிறையப் போட்டிகள் விளையாடி இருக்கிறேன். இங்கிருக்கும் மைதானத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதனால் டாஸ் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை” என இரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தார் ரோஹித் சர்மா.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா 4 ஆம் இடத்தில இருந்த நியூசிலாந்து அணியுடன் விளையாடி எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது.
அதேபோல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா அரையிறுதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்றையப் போட்டி மீண்டும் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி எதனை முன்வைக்கப்போகிறார்கள், எவ்வாறு தங்கள் கிரிக்கெட்டை விளையாட போகின்றனர் என்பது எங்களுக்கும் தெளிவாக தெரியும். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனம் பற்றியும், சவால்கள் குறித்தும் நாங்கள் கவனமாக இருக்கிறோம் ” என்று கூறினார்.
மேலும் அவர், ” நான் மும்பை வான்கடேவில் நிறையப் போட்டிகள் விளையாடி இருக்கிறேன். இங்கிருக்கும் மைதானத்தைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். அதனால் டாஸ் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை ” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.