தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல், கொலை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்தது. இதனால், பெண்கள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
தற்போது, தொழில் அதிபர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுவும், தமிழகத்தின் தலைநகர் சென்னையில், குறிப்பாக, சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் உணவகத்திற்கு சென்ற ரவுடிகள் சிலர், தங்களுக்கு மாதம் மாதம் மாமூல் கொடுக்க வேண்டும் என உணவக ஊழியரை மிரட்டியுள்ளனர்.
ஆனால், அதற்கு அவர், நாங்கள் நேர்மையாக தொழில் செய்கிறோம். அரசுக்கு வரி கட்டுகிறோம். எதற்காக உங்களுக்கு மாமூல் தரவேண்டும் எனவே, மாமூல் தரமுடியாது என தெரிவித்துள்ளார். இதனால், ஆவேசம் அடைந்த ரவுடிகள் உணவகம் உள்ளே புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Petrol bombs, broad daylight murders under the influence of alcohol & drugs, unsafe streets for women and a rise in goondaism are the successes of the Corrupt DMK govt.
In Tirumangalam, Chennai, rowdies have beaten up an eatery manager for refusing to pay protection money.
It… pic.twitter.com/GQgnPe5iu7
— K.Annamalai (@annamalai_k) November 14, 2023
தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது புகார் அளித்தும் காவல்துறை அவர்களை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இது போன்ற சம்பவங்கள் மூலம் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைந்து வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை, வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.