பான் வேர்ல்ட் திரைப்படமாக ஹனு-மான் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
ஹனு-மானின் பக்தி, திறமை, விசுவாசம், சாகசம் ஆகியவற்றை மையமாக வைத்து குழந்தைகளை ஈர்க்கும் வகையில் உருவாகி வருகிறது ஹனு – மான் என்ற திரைப்படம். இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கி வருகிறார். இளம் கதாநாயகன் தேஜா சஜ்ஜா நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனுதீப் தேவ் இசையமைத்துள்ளார். மதுரகவி பாடல் எழுதியுள்ளார். ஆர்.பி.கிரிஷாங், அஹானா பாலாஜி, சாய்வேதா வாக்தேவி உள்ளிட்டோர் பாடல்களைப் பாடியுள்ளனர். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் ஹனு-மான் படத்திலிருந்து சூப்பர் மேன் கீதமான ஹனு -மான் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகள் உள்பட பான் வேர்ல்ட் திரைப்படமாக வெளியாக உள்ளது.