ரஷ்யா உக்ரைன் போரால் 2021ஆம் ஆண்டு மருத்துவ படிப்பை படிக்க முடியாமல் நாடு திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் ஆயிரம் பேருக்கு உஸ்பெகிஸ்தானில் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்ட பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு தொடங்கியபோது சுமார் 19,000 இந்திய மாணவர்கள் உக்ரைனில் படித்து வந்தனர். போர் காரணமாக படிப்பை தொடர் முடியாத பல மாணவர்கள் மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா’ திட்டம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போர் நீடித்து வந்ததால் அவர்கள் தங்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அதில் பல மாணவர்கள் மற்ற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு மாற்றப்பட்டு படிப்பை தொடர்ந்து வருகின்றனர். பலர் ரஷ்யா, செர்பியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்திய மாணவர்கள் சுமார் ஆயிரம் பேருக்கு உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்துள்ளது.
உக்ரைனை விட சமர்கண்டில் செலவுகள் அதிகமாக இருப்பதாகவும் ஆனால் தனது கல்வியைத் தொடர முடிவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பீகாரை சேர்ந்த அமித் என்ற மருத்துவ மாணவர் தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் பல்கலைக்கழகங்கள் ஆங்கிலத்தில் பாடம் எடுப்பதாகவும், பாடத்திட்டம் அதே வழியில் இருப்பதாகவும் மீரட்டைச் சேர்ந்த திவ்யான்ஷ் வாத்வா கூறினார்.