ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக ஊடுருவ முயன்ற இரு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றுள்ளனர்.
இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதி ஐந்து தீவிரவாதிகள் ஊடுருவல் முயன்ற நிலையில், இருவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.