ஒரு இந்தியர் என் சாதனையை முறியடித்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். என் காலை தொட்டவர் இன்று என் இதயத்தை தொட்டுவிட்டார் என சச்சின் தெரிவித்துள்ளார்.
ஒரு இந்தியர் என் சாதனையை முறியடித்ததை நினைத்தால் பெருமையாக உள்ளது என்று விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் விராட் கோலி தனது 50 வது சத்தத்தை பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 20 வருட சாதனையை விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சொந்த ஊரிலேயே அவரது முன்னிலையில் முறியடித்துள்ளார்.
மேலும் விராட் கோலி சதம் அடித்தவுடன் சச்சினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலை குனிந்து நன்றி தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கரும் எழுந்து நின்று விராட் கோலிக்கு கைத்தட்டு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ” முதல்முறையாக விராட் கோலியை நான் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் கண்டபோது மற்ற சீனியர் வீரர்கள் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளும்படி விராட் கோலியை பிராங்க் செய்தார்கள். அதனை விராட் கோலி செய்த போது என்னால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனால் அதன்பிறகு உன்னுடைய திறமையாலும் உத்வேகத்தாலும் என் காலை மட்டும் அல்ல என் மனதையும் தொட்டு விட்டாய். அந்த இளம் வீரர் தற்போது விராட் என்ற வீரராக உருவெடுத்து இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
ஒரு இந்திய வீரர் என்னுடைய ரெக்கார்டை முறியடித்து இருக்கிறார் என்பதை நினைத்து என்னால் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதுவும் உலகக்கோப்பை அரை இறுதி போன்ற ஒரு பெரிய போட்டியில் இந்த ரெக்கார்டை நீங்கள் படைத்திருக்கிறீர்கள்.
அதுவும் எனது சொந்த மைதானத்தில் இந்த சாதனை நிகழ்த்தி இருப்பது தான் இதில் ஹைலைட்டே என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார்.
இதேபோன்று இங்கிலாந்து வீரர் நாசர் உசேன் பேசுகையில், சச்சின் உடைய சாதனைகளை எல்லாம் யாராலும் முறியடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் அதனை என் வாழ்நாளிலே நான் பார்ப்பேன் என்று கனவில் கூட பார்க்கவில்லை என்று நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் விராட் கோலி தனது 50 வது சத்தத்தை பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 20 வருட சாதனையை விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் சொந்த ஊரிலேயே அவரது முன்னிலையில் முறியடித்துள்ளார்.
மேலும் விராட் கோலி சதம் அடித்தவுடன் சச்சினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலை குனிந்து நன்றி தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கரும் எழுந்து நின்று விராட் கோலிக்கு கைத்தட்டு பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ” முதல்முறையாக விராட் கோலியை நான் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் கண்டபோது மற்ற சீனியர் வீரர்கள் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளும்படி விராட் கோலியை பிராங்க் செய்தார்கள். அதனை விராட் கோலி செய்த போது என்னால் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
ஆனால் அதன்பிறகு உன்னுடைய திறமையாலும் உத்வேகத்தாலும் என் காலை மட்டும் அல்ல என் மனதையும் தொட்டு விட்டாய். அந்த இளம் வீரர் தற்போது விராட் என்ற வீரராக உருவெடுத்து இருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
ஒரு இந்திய வீரர் என்னுடைய ரெக்கார்டை முறியடித்து இருக்கிறார் என்பதை நினைத்து என்னால் மகிழ்ச்சி கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அதுவும் உலகக்கோப்பை அரை இறுதி போன்ற ஒரு பெரிய போட்டியில் இந்த ரெக்கார்டை நீங்கள் படைத்திருக்கிறீர்கள்.
அதுவும் எனது சொந்த மைதானத்தில் இந்த சாதனை நிகழ்த்தி இருப்பது தான் இதில் ஹைலைட்டே என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டி இருக்கிறார்.
இதேபோன்று இங்கிலாந்து வீரர் நாசர் உசேன் பேசுகையில், சச்சின் உடைய சாதனைகளை எல்லாம் யாராலும் முறியடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் அதனை என் வாழ்நாளிலே நான் பார்ப்பேன் என்று கனவில் கூட பார்க்கவில்லை என்று நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.