அமெரிக்கா சென்றுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.
ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் சான்பிரான்சிஸ்கோ சென்றுள்ளார்.
அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசினார். இதனைத்தொடர்ந்து ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இரு நாடுகள் இடையே நல்லுறவு ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசித்ததாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை முன்னெடுத்து செல்வது குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவித்தார்.
எந்த தவறான கருத்தும் அல்லது தவறான தகவல் தொடர்புகளும் இரு நாடுகளுக்கு இடையே இருந்துவிடக் கூடாது என்றும், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்றும் பைடன் தெரிவித்தார்.
இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், காசாவில் உள்ள மருத்துவமனைகள் கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றும் ஜோ பைடன் கூறினார்.