உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடியது. இந்தத் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இதில் ரோஹித் சர்மா வழக்கம் போல் பவர் பிலேவில் தனது அதிரடியான ஆட்டத்தை தொடங்கினார்.
ரோஹித் சர்மா அடிக்கும் பந்து எல்லாம் சிக்சர்கள் மற்றும் பௌண்டரிசாக சென்றுக் கொண்டிருந்தன. இப்படி அதிரடியாக விளையாடி வந்த ரோஹித் சர்மா 9 வது ஓவரில் 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினர். இவருடன் தொடக்க வீரராக விளையாடி வந்த கில் தனது ரன் வேட்டையை ஆரம்பித்தார்.
சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில்லுக்கு திடீரென காலில் அடிபட்டதால் ரிடைர் ஹுர்ட் மூலம் விளையாட்டை தொடர முடியாமல் வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி கூட்டணி மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.
ஆரம்பத்தில் இருவரும் நிதானமாக விளையாடினாலும் போக போக இருவரும் தங்களின் அட்டகாசமான ஆட்டத்தை காண்பித்தனர்.
விராட் கோலி ஒரு பக்கம் பௌண்டரிசாக அடித்து நொறுக்க, ஸ்ரேயாஸ் ஐயர் மறுபக்கம் சிக்சர்களாக வெளுத்து வாங்கினார்.
அப்போது விராட் கோலி தனது 50 வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதற்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை கைதட்டி பாராட்டினார்.
பின்னர் விராட் கோலி 44 வது ஓவர் முடிய 9 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 113 பந்துகளில் 117 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 4 பௌண்டரீஸ் மற்றும் 8 சிக்சர்கள் என மொத்தமாக 70 பந்துகளில் 105 ரன்களை எடுத்து 49 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 20 பந்துகளில் 39 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
49 வது ஓவரில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் 1 ரன்னில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ரிடைர் ஹுர்ட் மூலம் வெளியேறிய கில் மீண்டும் களமிறங்கினார்.
இதில் கில் 8 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 66 பந்துகளில் 80 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சவுத்தி 3 விக்கெட்களும், டிரெண்ட் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவிந்திரா களமிறங்கினர்.
இதில் ரச்சின் ரவிந்திரா 12 ரன்களுக்கும் டெவோன் கான்வே 13 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அவர்களைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் களமிறங்கினர்.
கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இருவரும் சேர்ந்து இந்தியா நிர்ணயித்த இலக்கை நெருங்கிக்கொண்டே வந்தனர்.
ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெரும் என்பது போலவே இருந்தது அப்போது களத்தில் இறங்கினார் இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஷமி.
33 வது ஓவரில் ஷமி வீசிய பந்தை அடித்த கேன் வில்லியம்சன் ஆட்டமிழந்துபோனார். கேன் வில்லியம்சன் 8 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்கள் என மொத்தமாக 73 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் லாதம் டக் அவுட் ஆகி சென்றார். பின்னர் களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் அபாரமாக விளையாடி வந்தார்.
அப்போதும் நியூசிலாந்து அணி வெற்றி பெரும் வாய்ப்பு அதிகமாகவே இருந்தது அந்த சமயத்தில் பும்ரா வீசிய பந்தில் க்ளென் பிலிப்ஸ் ஆட்டமிழந்து போனார்.
க்ளென் பிலிப்ஸ் 4 போபுண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 33 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்துப் போனார்.
இவரைத் தொடர்ந்துச் சிறப்பாக விளையாடி வந்த டேரில் மிட்செல் 9 பௌண்டரீஸ் மற்றும் 7 சிக்சர்கள் என மொத்தமாக 119 பந்தில் 134 ரன்களை எடுத்து ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 49 வது ஓவரில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 327 ரன்கள் எடுத்து இறுதி வாய்ப்பை தவறவிட்டது.
இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 7 விக்கெட்களும், குலதீப் யாதவ் , பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனால் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது அபாரமாக பந்துவீசி 57 ரன்களை கொடுத்து 7 விக்கெட்களை எடுத்து முகமது ஷமிக்கு வழங்கப்பட்டது.
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா உலகக்கோப்பை போட்டியில் இறுதிசுற்றுக்கு தகுத்து பெற்றுள்ளது குறிப்பித்தக்கது.