மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், உள்ளூர் கலைஞர்கள் போபாலில் உள்ள படகு கிளப்பில், 400 சதுர அடியில் இரங்கோலியை உருவாக்கி உள்ளனர்.
மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலங்களில் மிகப் பெரியதும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படும் மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
இதற்கிடையே, மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையம் சார்பில், தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், போபாலில் உள்ள படகு கிளப்பில், திறமையான கலைஞர்களைக் கொண்டு இரங்கோலி வரையப்பட்டது.
சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட வண்ணங்களைக் கொண்டு 400 அடியில் இரங்கோலி உருவாக்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும்போது, வாக்காளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்துச் சித்தரிக்கிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்துச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இரங்கோலி வரைந்த கலைஞர் கூறியதாவது, தேர்தலில் வாக்களிப்பது ஒரு வகையான கொண்டாட்டம். நாம் தீபாவளியைக் கொண்டாடுவது போல், வாக்களிப்பதையும் கொண்டாட வேண்டும் என்று கூறினார்.