உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் தேம்பா பாவுமா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் :
குயின்டன் டி காக், டெம்பா பவுமா (கேப்டன்), ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மஹாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி தப்ரா ஸ்கிடிஹேம்
ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் :
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் , கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்