சென்னையில் ஜவுளி நிறுவன உரிமையாளர் தொடர்புடைய 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கே.கே. நகரில் வசித்து வருபவர் நீலகண்டன். இவர் பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட நகரங்களில் ஜவுளி தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை பெங்களூரூவில் இருந்து வந்த வருமான வரித்துறையினர் அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், தி.நகரை சேர்ந்த தொழில் அதிபர்களான பிரகாஷ், தினேஷ், நாகேஸ் ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம், வேப்பேரி, கோபாலபுரம், பட்டாளம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரி முறையாக செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.