வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவி விலகக் கோரியும் கட்சிச் சாா்பற்ற இடைக்கால அரசின் மூலம் தோ்தல் நடத்தக் கோரியும் எதிா்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் எதிா்க்கட்சிகளுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 போ் உயிரிழந்தனா்.
இந்நிலையில், பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வங்க தேச தலைமை தேர்தல் ஆணையர் காசி ஹபிபுல் தொலைக்காட்சியில் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு :
நவம்பர் 30 : வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்
டிசம்பர் 1 – 4 : வேட்பு மனு பரிசீலனை
டிசம்பர் 17 : வேட்பு மனு திரும்பப்பெற இறுதி நாள்
டிசம்பர் 18 : சின்னம் ஒதுக்கீடு
2024 ஜனவரி 7 : வாக்குப்பதிவு
வங்க தேச வரலாற்றில் முதல் முறையாக தொலைக்காட்சி உரையில் தேர்தல் ஆணையர் இந்த அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.