மேற்கத்திய நாடுகளில் இருந்து விலக்கப்பட்ட போதிலும் பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக தொகையை ரஷ்யா ஒதுக்க முடிவு செய்துள்ளது.
ரஷ்யா பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் 2024 பட்ஜெட் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 2024 ஆம் ஆண்டிற்கான செலவினத்தில் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக பாதுகாப்புச் செலவுகள் சமூகச் செலவினங்களை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இருந்து விலக்கப்பட்ட போதிலும், எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து நீடித்த வருவாய் காரணமாக ரஷ்யா பொருளாதாரத் தடைகளைத் தாங்கும் என கூறப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் 36.66 டிரில்லியன் ரூபிள் (தோராயமாக $411 பில்லியன்) எதிர்பார்க்கப்படும் செலவினத்தை வரைவு பட்ஜெட் சுட்டிக்காட்டுகிறது. ரஷ்யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.8 சதவிகிதம் பட்ஜெட் பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் செலவினங்களில் சுமார் 39 சதவீதம் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத்திற்கு ஒதுக்கப்படும் என வணிக பத்திரிகையாளர்களான ஃபரிதா ருஸ்டமோவா மற்றும் மக்சிம் டோவ்கெய்லோ தெரிவித்துள்ளனர்.
தவிர, ரஷ்யாவின் மத்திய வங்கி, 2024ல் 4.5 சதவீத பணவீக்கத்தை எதிர்பார்க்கிறது. பணவீக்க அழுத்தங்களை எதிர்கொள்ள முக்கிய வட்டி விகிதங்களை 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
ரஷ்யாவின் டுமா என்ற அமைப்பு நாட்டின் பாராளுமன்றத்திற்கு சமமானது, இந்த பட்ஜெட் டுமாவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.