ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு !
Oct 15, 2025, 08:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு 213 ரன்கள் இலக்கு !

Web Desk by Web Desk
Nov 16, 2023, 07:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களை ஆட்டமிழந்தது

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாம் அரையிறுதிப் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் தேம்பா பாவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா களமிறங்கினர். இந்த உலகக்கோப்பைத் தொடரில் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து வந்த குயின்டன் டி காக் மற்றும் டெம்பா பவுமா தென் ஆப்பிரிக்காவுக்கு மிக முக்கியமான போட்டியான அரையிறுதியில் இருவரும் மிகவும் மோசமாக விளையாடினர்.

டெம்பா பவுமா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகா அவரைத் தொடர்ந்து குயின்டன் டி காக் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஐடன் மார்க்ரம் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் இணை சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்த நேரத்தில் அவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதில் ஐடன் மார்க்ரம் 2 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 10 ரன்களிலும் ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் 31 பந்துகளில் 6 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்காவின் நிலையை கண்டு வானமே அழுதது போல் அப்போது மழை பெய்ததால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்ட்டது.

மழை நின்றவுடன் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் கூட்டணி சற்று சிறப்பாக விளையாடி வந்தது.

இவர்கள் இருவரும் அணியை முன்னேற்றி வந்தனர். 100 ரன்கள் கூட தாண்ட வாய்ப்பில்லை என்று நினைக்கும் சமயத்தில் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இறுதியாக இந்த கூட்டணியும் முடிவுக்கு வந்தது. ஹென்ரிச் கிளாசென் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 48 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்கோ ஜான்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகா அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெரால்ட் கோட்ஸி 2 பௌண்டரீஸ் என மொத்தமாக 19 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது சிறப்பாக விளையாடி வந்த டேவிட் மில்லர் சதம் அடித்து ஆட்டமிழந்தார். மொத்தமாக டேவிட் மில்லர் 8 பௌண்டரீஸ் மற்றும் 5 சிக்சர்கள் என 101 ரன்களில் ஆட்டமிழந்துப் போனார்.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 212 ரன்களை ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிராவிஸ் ஹெட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 213 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: ICC World Cupaustralia vs south affrica
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க நடிகை !

Next Post

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Related News

71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு!

மதுரையில் தீபாவளி விற்பனை விறுவிறுப்பு!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்று : ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய்

உத்தரபிரதேசம் : புளித்து போன 2600 கிலோ ரஸகுல்லா பறிமுதல்!

திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

தென்காசி : வெளுத்து வாங்கிய மழை!

காசாவில் உள்நாட்டு போரால் பாலஸ்தீனியர்கள் அதிருப்தி!

ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம் – பிரதமர் மகிழ்ச்சி!

பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை : அமித்ஷா

நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு : ஒருவர் உயிர் தப்பிய காட்சி வைரல்!

வடகிழக்கு பருவமழை நாளை தொடக்கம்!

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமையாக்கிய EPFO 3.0. : இனி சில CLICK-களில் PF தொகை உங்களிடம்…!

ZOHO வெற்றிக்கு தேசபக்தியே காரணம் : ஸ்ரீதர் வேம்பு பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies