சர்வதேச மாணவர்கள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 17ஆம் தேதி, மாணவர்களின் எழுச்சியை சர்வதேச அளவில் நினைவூட்டுவதற்காக கொண்டாடப்படுகின்றது.
1939 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி செக்கோஸ்லோவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் உள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தில் நாஜிக்களால் ஜான் ஒப்லேடல் என்பவர் கொல்லப்பட்டதற்கும், செக்கோஸ்லோவாக்கியா ஆக்கிரமிக்கப்பட்டதற்கும் எதிராக பெரும் மாணவர் போராட்டம் நடைபெற்றது.
அம்மாணவர்கள் போராட்டத்தை நசுக்கிய நாஜிப் படையினர் ஒன்பது மாணவர் தலைவர்களை தூக்கிலிட்டனர்.
1200க்கும் மேற்பட்டவர்கள் சித்ரவதை முகாமிற்கு அனுப்பப்பட்டனர். பின் செக்கோஸ்லோவாக்கியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன.
இந்த நாளை குறிக்கும் விதத்தில் சர்வதேச மாணவர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினம் முதன் முதலில் 1941 யில் இலண்டனில் உள்ள சர்வதேச மாணவர்கள் கவுன்சிலால் கடைப்பிடிக்கப்பட்டது.