திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 5.40 மணி அளவில் துலா லக்கனத்தில்அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெற உள்ளது. நவம்பர் 22-ந்தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 23-ந் தேதி மகா தேரோட்டமும் நடைபெறும். முக்கிய விழாவான மகா தீபம் நவம்பர் 26-ந் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்படுகிறது.