வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், பாதுகாப்பற்ற தனிநபர் கடன்களுக்கான ரிஸ்க் வெயிட்டேஜ் 25 சதவீத புள்ளிகள் உயர்த்தப்பட்டு, 125 சதவீத புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வீட்டுக்கடன், வாகனக் கடன், கல்விக் கடன் மற்றும் தங்க நகை கடன்களுக்கு 100 சதவீத புள்ளிகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கடன் அட்டைகள் மீதான ரிஸ்க் வெயிட்டேஜ் 25 சதவீத புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு, 150 சதவீத புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரிஸ்க் வெயிட்டேஜ் புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் கட்டுப்படுத்தப்படும். பாதுகாப்புடன் கடன் வழங்க அறிவுறுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி இந்நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.