ஹரியானா மாநிலத்தில் பூஜைக்கு சென்றுவிட்டு திரும்பிய இந்து பெண்கள் மீது பள்ளிவாசலில் இருந்த குழந்தைகள் கற்களை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நுஹ்வில் உள்ள வார்டு எண் 11 இல் வசிக்கும் ஒருவரின் மகனுக்காக குவான் பூஜன் சடங்கு நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக இரவு 8.30 மணியளவில் கைலாஷ் மந்திருக்கு சென்று விட்டு இந்து பெண்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள மசூதியில் இருந்த குழந்தைகள் சிலர் இந்து பெண்கள் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதில் 6 பேர் காயம் அடைந்தனர். இரு பிரிவினரும் குவிந்ததால் அங்கு பதற்றம் நிலவியது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் சமரச பேச்சுவாத்தை நடத்தியதால் இரு பிரிவினரும் கலைந்து சென்றனர். இதனிடையே அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.