ஓராண்டுக்கு மேலாகப் பயன்படுத்தாமல் இருக்கும் யுபிஐ ஐடிகளை, டிசம்பர் 31-க்கு பிறகு, செயலிழக்கச் செய்யும் வழிகாட்டுதல்களை என்.பி.சி.ஐ வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு ஜி பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட ஆன்லைன் பேமன்ட் சேவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சேவைகள் யு.பி.ஐ கீழ் செயல்படுகிறது. பயனர்கள் தங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய யு.பி.ஐ மூலமாக டிஜிட்டல் முறையில் பணத்தைப் பரிமாற்றி கொள்ளலாம்.
இந்த நிலையில், ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை மேற்கொள்ளாமல் இருக்கும், யுபிஐ.-கள் டிசம்பர் 31-க்குப் பிறகு செயலிழந்து விடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்யும் புதிய வழிகாட்டுதல்களை என்பிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வங்கிகளும், ஜி பே, போன்பே போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால், யுபிஐ ஐடிகள் டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின் தடை செய்யப்படும். இந்தப் புதிய விதிமுறைகள் காரணமாக, தவறான நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுவது தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.