அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக, 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை திமுக அரசு கையகப்படுத்த முயன்றதை எதிர்த்து, போராட்டம் நடத்திய விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
இத்தைகைய திமுக அரசின் அடக்குமுறையைக் கண்டித்து திருவண்ணாமலையில் தமிழக பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து அமைச்சர் எ.வ. வேலுவின் பேச்சிச்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது நாளிதழில் பார்த்துத் தெரிந்துக் கொண்டதாகவும், தொழிற்சாலைகளை வானத்திலா கட்ட முடியும் என்று விவசாயிகளை கொச்சைப்படுத்தியும் பேசிய அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு @BJP4TamilNadu சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். pic.twitter.com/MeA1JSc7qN
— K.Annamalai (@annamalai_k) November 17, 2023
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது நாளிதழில் பார்த்துத் தெரிந்துக் கொண்டதாகவும், தொழிற்சாலைகளை வானத்திலா கட்ட முடியும் என்று விவசாயிகளை கொச்சைப்படுத்தியும் பேசிய அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு
தமிழக பாஜக சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார்.