அகமதாபாத்தில் நடைபெறும் உலகக்கோப்பையை சீர்குலைக்க போவதாக காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்வை சேர்ந்த குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் அகமதாபாத் வருவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில் ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டியை சீர்குலைப்போம் (பயங்கர கோப்பையை மூடுவோம்) என தெரிவித்துள்ளான்.
காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். அந்த வீடியோவில், நரேந்திர மோடி ஸ்டேடியம் காலிஸ்தானி கொடிகளுடன் காட்டப்பட்டுள்ளது.
குர்பத்வந்த் சிங் பன்னுனின் மிரட்டல் வீடியோ கவனத்திற்கு வந்ததையடுத்து, மத்திய பாதுகாப்பு அமைப்புகளும், குஜராத் காவல்துறையும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.
இதேபோல் ஏர் இந்தியா விமானத்தை தகர்க்கப் போவதாக நவம்பர் 5 ஆம் தேதி குர்பத்வந்த் சிங் பன்னுன் விடுத்தான். நவம்பர் 19ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்றும், அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் சீக்கியர்களுக்கு அவன் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.