பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
Oct 26, 2026, 02:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 18, 2023, 11:53 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், உலகின் சில நாடுகள் நிலைகுலைந்துள்ளன. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதேபோல், நவம்பர் 3-ஆம் தேதி இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், 150-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மண்டனோ தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த தீவை மையமாகக் கொண்டு 789 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கியது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, “6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வணிக கட்டடங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இதனால், வணிக வளாகத்தில் உள்ள ஊழியர்களை வெளியேற உத்தரவிட்டுள்ளோம். மேலும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியை சீர்குலைக்கப்போவதாக மிரட்டல்

Next Post

மத்தியப் பிரதேசத்தில் 76%, சத்தீஸ்கரில் 75% வாக்குப்பதிவு!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies