சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமின் கோரிக்கை தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. கழுத்து வலி தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிகிறது
இதனைத்தொடர்ந்து அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இன்று எம்.ஆர்.ஐ சோதனை செய்யப்பட உள்ளது. இதில் அவருக்குப் பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தால் தொடர் சிகிச்சை அளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.