தங்களுக்கு வேண்டியவர்களை பதவிக்கு கொண்டு வரும் முயற்சிக்கு ஆளுநர் தடையாக இருப்பதால் அவரை திமுகவினர் எதிர்ப்பதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஏற்க மறுத்தும், மசோதாக்கள் மீதான விவாதத்தில் கவர்னருக்கு எதிரான எம்.எல்.ஏக்களின் உரையை கண்டித்தும் தமழக சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் நாள்தோறும் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பால் விலை உயர்வுக்கு எதிராக போராட்டம், அரசாங்க ஊழியர்கள் போராட்டம் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களை திசை திருப்ப ஆளுநர் விவகாரத்தை திமுகவினர் கையில் எடுக்கின்றனர். ஆளுநர் தனது அதிகார வரம்பிறக்கு உட்பட்டு செயல்படுகிறார் என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.
தங்களுக்கு வேண்டியவர்களை பதவியில் அமர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்கு ஆளுநர் தடை யாக உள்ளதால் அவரின் செயல்பாடுகளை திமுகவினர் எதிர்க்கின்றனர். ஆளுநர் பொதுவிழாவில் கலந்துகொள்ள எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆளுநர் மாளிகையிலேயே அவர் இருக்க வேண்டுமா என்றும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
ஆட்களை செட்அப் செய்து பெட்ரோல் குண்டு வீசும் புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.