2026 ஆம் ஆண்டு ஆண்களுக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2 வது சுற்றில் 36 அணிகள் பங்கேற்றுள்ளன.
36 அணிகளும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை லீக் போட்டியில் விளையாடவுள்ளன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3 வது சுற்றுக்கு முன்னேறும்.
அந்த வகையில் நேற்று நடந்த தகுதி சுற்றுப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் உருகுவே அணிகள் விளையாடின. இந்தப் போட்டி பியூனஸ் அய்ரஸ் நகரில் நடைபெற்றது.
இதில் தொடக்கம் முதல் உருகுவே அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 41 வது நிமிடத்தில் உருகுவே அணியின் ரொனால்ட் அரௌஜோ கோல் அடித்தார்.
அவரைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் 87 வது நிமிடத்தில் உருகுவே வீரர் டார்வின் நுனேஸ் கோல் அடித்தார். இதனால் இந்தப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றிப் பெற்றது.
உலகக்கோப்பை தகுதி சுற்றில் தென் அமெரிக்கவைச் சேர்ந்த அணிகளுக்கான புள்ளி பட்டியலில், 12 புள்ளிகளுடன் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது. உருகுவே 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக் கோப்பைக்கு பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்துள்ளது .