சிங்கப்பூரில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி செலுத்தினார்.
ஆசியான் பாதுகாப்பு துறை அமைச்சர்களுக்கான மாநாடு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நவ.16-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், வியட்நாம் சென்றார்.
பின்னர் சிங்கப்பூர் சென்ற ராஜ்நாத்சிங், இந்திய தேசிய ராணுவத்திற்கான நினைவிடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்திற்கும் மறைந்த இந்திய வீரர்கள் நினைவாகவும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், சிங்கப்பூரில் இருக்கும் இந்திய தேசிய ராணுவத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினேன். இந்திய தேசிய ராணுவத்தின் அடையாளம் தெரியாத வீரர்களுக்கு எனது இதயப்பூர்வமான அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள மிகப் பழமையான சீனிவாச பெருமாள் கோவிலில் அமைச்சர் ராஜ்நாத்சிங் தரிசனம் செய்தார்.