தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார்.
தமிழக அரசு அனுப்பிய 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இதனையடுத்து நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோத்தாக்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் ஆர.என்.ரவி இன்று மாலை சுமார் 5.15 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லியில் அவர் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.